காதல் மனதிலே ,,

கருகரு உன் விழி
சொல்லிடும் ஒரு மொழி
புரிதலில் ஒரு வலி
கவிதையாய் தனி வழி ...

கவிதையை பிடிக்கும்
உன்னை பிடிக்கும்
மௌனம் பிடிக்கும்
எனக்குள் துடிக்கும்
காதல் பிடிக்கும் ....

அருகில் இருந்தும்
உன்தூரம் பிடிக்கும்
நான் தூர இருந்தும்
உன் நிழலை துரத்தும்
என் காதல் பிடிக்கும்

சொல்ல தயங்கும்
வார்த்தை பிடிக்கும்
புலம்பல் பிடிக்கும்
கவிதை வடிக்கும்

ரசிக்க ரசிக்க
தனிமை பிடிக்கும்
நாளும் தொடருமே
காதல் மனதிலே

எழுதியவர் : ருத்ரன் (28-Mar-16, 3:26 am)
பார்வை : 169

மேலே