தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 20 = 52

“சந்துக்குள் சிந்துப் பாயும் சுந்தரி - சிறு
பொந்துக்குள் நான் நுழைய அனுமதி..!

வங்கக்கடல் மனம் கொண்ட மன்னவா
சங்கடங்கள் எனக்கில்லை நீ நுழையலாம் !

கொதிக்கும் குழம்பு போலே
நெஞ்சம் குதிக்குது தன்னாலே

முந்தானை மோகம் வந்தாலே
மனம் தள்ளாடும் தன்னாலே

கனகமணி பெற்றெடுத்த பூங்குயில்
பறந்து வருகிறது எனக்காக தனிமையில்

தினமணி இதழ் போலே உன் தமிழ்
சுத்த தமிழ்ப்பேசி சுதி கூட்டும் செந்தமிழ்

காணாத காட்சி ஒன்று
காண்கின்றேன் நான் இங்கு

அடைய துடிக்குதா நெஞ்சு.. ?
வந்து - அணைத்துக்கொள்ளு.. !


மோதிர விரலின் அளவெடுத்து
மாதுளை நிறக்கல் பதித்து
மோகினி உனக்கு சூடும்போது
மோகப் பார்வை வீசுவதென்ன ?

மந்திரம் சொல்லும் இந்திரனே
தந்திரம் செய்வதில் சந்திரனே
மோதிரம் அளித்த மோகனனே
முந்தானை பிடித்து இழுப்பதென்ன ?

இழுப்பதில் ஒரு சுகம் இருக்குதம்மா
இழுக்க இழுக்க நாணம் ஏனம்மா ?
பாஞ்சாலியே கூச்சப்படாதே...
பகவான் கண்ணன் நானம்மா !

வரம்கொடு கண்ணா ! வரம் கொடு !
வாழ்வாங்கு வாழ வரம் கொடு !
நம்மில் பிரிவே இல்லையென்று
நீயே புடவையை கட்டிவிடு.. !

எழுதியவர் : (28-Mar-16, 6:41 am)
பார்வை : 70

மேலே