கண்ணீரில் கரைகிறது கனவு

கொத்தனார் வேலைக்கு போகுபவரவர்
வாங்கிய தினக்கூலி
ஒயின்ஷாப்பிலும் சீட்டாத்திலும்
தள்ளாடும்
என்றாவது வீட்டிலும் தள்ளாடும்.
மகன்
பன்னிரண்டாவதிலிருந்து
கல்லூரிக்கு போகும் காலமது
மகனுக்கு சிவில் இன்ஜினியரிங்
படிக்க ஆசைன்னு அம்மா சொல்ல‌
மேற்படிப்புக்கு வசதியில்ல‌
என்கூட வந்து
தொழில் கத்துக்க சொல்லுன்னு
அப்பா சொல்ல‌
ஒயின்ஷாப்பில
செலவு செய்த காச சேமிச்சிருந்தா
படிக்க வச்சிருக்கலாமேன்னு
அம்மா கேட்க‌
குடிக்கலன்னா உடம்புவலி போகாதுன்னு
அப்பா கத்த,
சதை இரத்தம் வலியெல்லாம்
உங்களுக்கும் எனக்கும் ஒன்னுதான்,
நீங்க கொத்தனார் நான் சித்தாள்
அவ்வளவுதான் வித்தியாசம்னு
அம்மா கத்த,
கண்ணீரில் கரைகிறது
மகனின் கனவு .*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (28-Mar-16, 10:09 pm)
பார்வை : 63

மேலே