நடமாடும் நதிகள்

உழவன்
ஏர் பிடித்தான்
உலகுக்கு உணவிட ...
மரங்கள்
கொடை பிடித்தன
சற்றே இளைபாரிட ...
அந்தி வானம்
சிவப்பு கம்பளம் விரித்தன
உழைப்பை போற்றிட ....
வரப்புகள்
வழி காட்டின
வயலின் தூரத்தை...
மாலை பொழிதில்
மங்கிய வெளிச்சத்தில்
ஏர் கலப்பையை
தொழில் சுமந்து
உழைப்பின் சந்தோஷத்தில்.....