வங்கிகளின் வேலை நிறுத்தம் நியாயமா

நமது இந்திய தேசத்தில் வங்கிகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதின் நோக்கமே கடைசி குடிமகன் வரை வங்கிகளின் சேவை எட்டவேண் டும் என்பதற்க்காகவே. அனால் நோக்கம் சீர் குலைந்து விட்டது வங்கிகள் பெருகிவிட்டது .
சாமான்ய மனிதன் ஒரு நாடுடமையாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவங்கவோ அல்லது துவங்கிய கணக்கில் பணம் செலுத்தவோ அல்லது தன் கணக்கில் இருந்து பணம் எடுக்கவோ அல்லது கேட்பு வரைவோலை Demand
Draft எடுக்கவோ சென்றால் அந்த வங்கி அவனை படாத பாடு படுத்திவிடுகிறது வங்கியில் கணினி மயமாக்கப்பட்டும் இன்னமும் காசாளர்கள் denomination எழுதவில்லை என்று துரத்தி அடிக்கும் பாங்குதான் காணப்படுகிறது .
கடன் கேட்டு சென்று விட்டாலோ அந்த வங்கிகள் அரசின் உத்தரவையோ அல்லது வங்கிகளின் சட்டதிட்டங்களை சற்றும் கண்டு கொள்ளாமல் கடன் கேட்டு வந்தவரை விரட்டி அடிக்கும் போக்கு இன்னம் காணப்படுகிறது .நடுத்தர வருவாய் ஈட்டும் வாடிக்கையாளர்களை சற்றும் மதிப்பதே இல்லை ஏதோ அவர்களிடம் யாசகம் கேட்க வந்தது போல் நடத்தும் அவலமும் இந்த பொது துறை வங்கிகளிடம் தான் காணப்படுகிறது
இத்தகைய வாடிக்கையாளர்களுக்கென்றே ஏராளமான வங்கி விதி முறைகளை கூறி அந்த சாமான்ய மனிதன் ஏன் இந்த வங்கிக்கு கடன் கேட்க வந்தோம் என்று விழி பிதுங்கி ஓடவைக்கிறது
இவை எல்லாம் பொதுவான சேவை குறைபாடுகள் இதை விட சொல்லமுடியாத அநியாயம் எது வென்றால்
இவர்கள் திடீர் திடீர் என வேலை நிறுத்தம் அறிவித்து நாட்டு மக்களையும் வாடிக்கையாளர்களை யும் திக்கு முக்காட வைப்பது தான் . இவர்கள் வேலை நிறுத்தம் எந்த விதத்தில் நியாயம் ? இத்தகைய பொது துறை வங்கிகளின் போக்கு தனியார் வங்கிகளின் சுரண்டலுக்கல்லவா துணை போகிறது இந்த வங்கிகளின் அலட்சியம் தனியார் வங்கிகளின் விஸ்தரிப்புக்கு அல்லவா துணை போகிறது
வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களின் தேவைக்கு அவர்களின் உத்தரவுக்கு அவர்களுக்கோ அல்லது
அவர்களின் உத்தரவு பெற்றவர்க்கோ தருவதாக கூறி பெற்று முதலீடு செய்து லாபம் பெற்று அந்த லாபத்தில் ஊதியம் வசதியான வாழ்க்கை இவற்றை அனுபவிக்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் திடீர் திடீர் என வேலை நிறுத்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ?
இவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன் வங்கியில் வைப்பு
வைத்திருப்பவர்களிடமும் தான் முன் அனுமதி பெறவேண்டும் அவ்வாறு எந்த வங்கியும் செய்வதில்லையே
இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று சொல்லி அவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும்
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எந்த நிவாரணமும் இது வரை அரசும் தந்ததில்லை ?
எனவே வாடிக்கையாளர்களே நீங்கள் இன்றி வங்கிகள் இல்லை உங்கள் சேமிப்பும் வைப்பு தொகைகளும் இன்றி வங்கிகள் முதலீடுகளும் இல்லை அவர்களின் வசதியான வாழ்க்கை இல்லை எனவே நீங்கள் உரிமைகளை எக்காரணம் கொண்டும் வங்கிகளிடம் அடகு வைக்கவேண்டாம் வாடிக்கையாளர்களே பொது மக்களே விழிப்புடன் இருங்கள்
உங்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் இழக்க வேண்டாம்.

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (29-Mar-16, 6:11 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 90

மேலே