தீராத விளையாட்டுப் பிள்ளை

வார்த்தை ஜாலங்களால்
வலை விரித்து

வண்ணக் கதைகளால்
கண்ணைக் கட்டி

துறு துறு பார்வையில்
தூண்டில் போட்டு

நயமுறு மொழியால்
நகை பல கூறி

தப்புத் தப்பாய்
தமிழைக் கோர்த்து

தப்பிப் பிழைக்கும்
கருத்தைத் துவைத்து

எப்போதும் தப்பாமல்
என்னைச் சீண்டி

தப்பேதும் செய்யாததாய்
நடித்துக் கொள்ளும்
அப்பாவிச் சுட்டிப்பயலே

விலகிச் செல்ல
மனமின்றி
மறுபடியும் வந்து
மாட்டிக் கொள்கிறேன்
உன் பாசவலையில்

அடுத்த பிறவி இருந்தால்
உன் குழந்தையாய் பிறப்பேன்.

கவலை மறந்து காலமெல்லாம்
மகிழ்ந்திருக்க..

எழுதியவர் : சிவநாதன் (31-Mar-16, 6:39 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 57

மேலே