வெண்ணிலாயிங்கு ஏனோ விளம்பு - இரு விகற்ப நேரிசை வெண்பா

இரு விகற்ப நேரிசை வெண்பா

அந்தியெழில் பொங்கிவரும் ஆனந்தப் பேரெழிலே!
சிந்தைதனில் செப்புவித்தை செய்திடும் - செந்தமிழ்ப்
பெண்ணழகே! புன்னகைப் பூவாய்நீ பூத்திருக்க
வெண்ணிலாயிங்(கு) ஏனோ விளம்பு!

இந்தப் பாடலை சொற்கள் அமைப்பு, பொருள் நயம், செப்பலோசை, எதுகை , மோனை என்று தனித்தனியாக நயம் பாராட்டும்படி 'எழுத்து' நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

poemhunter ல் While You Have Blossomed Like A Smiling Flower! என்ற தலைப்பில் வாசித்துக் கருத்தளியுங்கள். இதையும் வாசியுங்கள்.

மேலேயுள்ள புகைப்படம் 2014 ல் இலண்டன் சென்றிருந்த பொழுது, 'இலண்டன் கண்' (London Eye) என்ற ராட்டினம் போன்ற கூண்டிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் சுழன்றபடி இலண்டனைச் சுற்றிய பகுதிகளை உயரத்திலிருந்து பார்ப்பது இன்பம் பயப்பதாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-16, 6:18 pm)
பார்வை : 77
மேலே