விகாரங்கள்
மனிதனுக்குள்
நிறம் மாறும்
நிஜங்கள்
தினம் மாறும்
முகங்கள்
போலியாய் சிரிக்கும்
இதழ்கள்
கேலியாய் சிந்தும்
கண்ணீர்
மனமோ வஞ்சக மூட்டை
போடுவதோ பொய் சட்டை
போலியாய் போடும்
உணர்ச்சி பாவங்கள்
ஆத்திரங்களை
அடை காக்கும் யந்திரங்கள்
உண்மையின் வழியோ
அமைதியின் உருவங்கள்
மனங்களின் மாயைகள்
சினங்களின் கோர்வைகள்
உருவம் பெறுகையில்
மரியாதை,புகழ்,பெயர்
எல்லாம் விகாரங்களின்
ஆகாரங்களாகிடும்