கன்னத்தில் நான்தந்தேன் இச் - நேரிசை வெண்பா

இரு விகற்ப நேரிசை வெண்பா

நீலவான தாரகைகள் நெஞ்சத்தில் தங்கிவிட
கோலமிடும் பாவையென்றன் கோகிலமே - நீலவிழி
இன்னமுதத் தென்றலாய் சன்னலூடே தீண்டிடஉன்
கன்னத்தில் நான்தந்தேன் இச்!

ஏந்திசைச் செப்பலோசை உடையது.

ஆதாரம்: கவின் சாரலனின் 'சாளரத்தில் என் கவிதை'

குறிப்பு:

மேலேயுள்ள படத்தில் மோனை அமைப்பது பற்றிய விபரம் தரப்பட்டுள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-16, 10:16 am)
பார்வை : 92
மேலே