கருமமே கண்ணாய் இரு

குபு குபு புகைவண்டி
நிலையத்தில் இருந்து
கிளம்பும் விசில் சத்தம்
ஒலித்தவுடன் பயணிகளின் ஆர்வம்
ஏறி தங்கள் இருக்கைகளை
தேடி அமர வேண்டும்
பொதிகளை வைக்க வேண்டிய
இடத்தில் வைத்து விட வேண்டும்
ஒரே அவசரம் அமர்க்களம்
அப்பப்பா எல்லாம் சரியாகி
ரயில் வண்டி கிளம்பி சென்று கொண்டிருந்தது
யன்னல் ஓரத்தில் அவள் யாரோ
அதுவும் முன் இருக்கை
ஏதோ அவனுக்கும் பொழுது மகிழ்ச்சியாய்
அவன் எண்ணம் எல்லாம் அவள்
அவள் இதை தெரிந்தும் தெரியாமலும்
ஆனால் இறங்கும் ஊர் வந்தததும் தெரியாமல்
அவள் நினைப்பில் மயங்கி தூங்கி விட்டான்
விழிப்புடன் இருந்த அவள்
தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விட்டாள்
அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும்
இவன் கண் விழித்துப் பார்த்தான்
எங்கேயோ வந்து விட்டோமே என்று அவசரமாக இறங்கி
திரும்பி வரும் ரயில் வண்டிக்காக காத்து நின்றான்
எங்கும் விழிப்புடன் செயல் பட வேண்டும்
கருமமே கண்ணாய் இரு

எழுதியவர் : பாத்திமாமலர் (3-Apr-16, 7:34 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vaazhkai
பார்வை : 281

மேலே