காந்த விழிப் பார்வையால்

காந்த விழிப் பார்வையால்
என் இதயம் துளைத்தாயே!!

கண் இமைக்கும் தருணத்தில்
என் கனவைக் களைத்தாயே!!

பூவிதழ் பேசும் வார்த்தையில் அதிசயம் ஏதடி
உனது கண்கள் சொல்லுமே ஆயிரம் அரிச்சுவடி!!

இன்றே உனை நான் கண்டேனே
உனையே எனதாய் நான் கொண்டேனே!!

உன் கண்கள் உன் அழகிற்கு இலக்கணமா
அதில் நான் என்ன ஆராதனை செய்யும் கவிஞனா??!!

ஒரு நொடியில் வாழ்க்கை மாறிப்போனதே
என் நினைவுகள் நீயென ஆனதே!!

விழியோரப் பார்வை தந்துவிடு
நீயே என் உயிரென ஆகிவிடு!!

எழுதியவர் : ரசிகா (4-Apr-16, 10:20 pm)
பார்வை : 179

மேலே