அந்த சுகம் போதும்

ஒற்றை வார்த்தை சொல்ல
நீயும் தயக்கம் கொள்ள
மௌனம் கொண்டு கொல்ல
ஆயுதம் காதல் அல்ல .......

ரசித்து கவிதை படிக்கும்
உந்தன் மனதை பிடிக்கும்
சம்மதம் கேட்டு நின்றால்
உன் நிழலும் கூட நடிக்கும்

அதையும் எனக்கு பிடிக்கும்
செல்ல கோபம் கொஞ்சம் வெடிக்கும்
உந்தன் பார்வை பட்டால்போதும் - கோபம்
ஓடி தொலைந்து போகும்

காதல் என்று சொல்லி முடிப்பேன்
அறியவில்லை நானும்
சொல்லாமல் இருந்தாலும் - காதலில்
அந்த சுகம் போதும் ....

எழுதியவர் : ருத்ரன் (5-Apr-16, 4:01 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 79

மேலே