யாகாவாராயினும் நாகாக்க

ஒவ்வொருவர் வாழ்விலும்
சொற்களும் சொல்லாடல்களும்;

என்றும் நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றன;

கைகளுக்கு வேலையில்லை,
கத்திக்கும் இங்கு வேலையில்லை,

தீய சொற்பிரயோகங்கள்,
முதிய சகோதரர்களுடன்;

காதல் மனைவியிடம்,
பெற்றோருடனும் கூட;

சொல்லாடல்கள்
எல்லா இடங்களிலும்;

வாய்ச் சவடாலாக மேடைகளிலும்,
பத்திரிக்கை அறிக்கைகளிலும்;

தொலைக்காட்சி செய்திகளிலும்
நிறைந்திருக்கின்றன;

காசு பணமும், ’தான்’ என்ற போக்கும்
தூசு என்று பிறரை எண்ணும்;

யாரும் எவருடனும்
இணக்கமாய்ப் போவதில்லை;

யாவர்க்கும் தெரிவதில்லை,
யாகாவாராயினும் நாகாக்க!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-16, 10:55 am)
பார்வை : 258

மேலே