ஓசை

‪#‎ஒரு_நிமிடக்கதை‬-20 ‪#‎ஓசை‬
ரமேஷ் வித்யாவின் ஞாபகத்தால் அவள் மேல் கொண்ட காதலால், அது உண்டாக்கிய மோகத்தால், உருண்டான் புரண்டான் குப்புற படுத்தான் தலையனையில் முகம் புதைத்தான் இருந்தும் தூக்கம் வரவில்லை.

திடீரென்று யோசித்தான்.. நிசப்தம்.. ஆம் சைலன்ஸ் என்று கூறிக்கொண்டே ஏசியை அனைத்தான். பேனையும் அனைத்தான். மணி முதற்சாமம் 2 அடித்தது.

அந்த அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் முடிவாக 2.05 என்று காட்டிய கடிகாரத்தின் ஓசை டப் டப் என்று தன் நொடி முள் ஓட்டதின் சத்தத்தை வெளியிட அதிலிருந்தும் மின்கலனை கழற்றினான்.

இப்போது அவன் இதயத்துடிப்பைக்கூட அவனால் கேட்க முடிந்தது. 'லப்டப் டப், லப்டப் டப்' லப்டப் டப்'.......
என்னடா இயற்கையின் அதிசயம், எல்லோருக்கும் லப்டப் என்று துடிக்க நமக்கு மட்டும் "லப்டப் டப்" ஆஹா இது தான் இதயப் பறிமாற்றமா அவள் இதயத்துடிப்பின் ஓசையும் சேர்ந்து துடிக்கிறதோ என்று அதிசயப்பட்டுப்போய் உறங்கினான்.

மெலிதான ரமேஷின் மூச்சுக்காற்றுக்கிடையே சற்று விகாரமாக லப்டப் என்ற ரமேஷின் இதயதுடிப்பும்...

டப் என்று குளியலறையில் டாப்பில் இருந்து டப்பில் துளி துளியாக விழுந்து நிரம்பி நான் வீனாகிக்கொண்டிருக்கிறேன் என்றவாறு தண்ணீரின் கண்ணீரோசையும்.

# தண்ணீரை சேமிப்போம். ‪#‎WorldWaterDay‬ ‪#‎SaveWater‬ ‪#‎தண்ணீர்‬

எழுதியவர் : விஜயகுமார் (5-Apr-16, 11:15 am)
சேர்த்தது : vejeicdm
Tanglish : oosai
பார்வை : 364

மேலே