எனக்கானத் தேடல்

நீண்டப் பயணம் தொடங்கினேன். . .

எனக்கே எனக்கானத் தேடல். . .

நானே என்னுள் என்னைத்
தேடும் தேடல்!!

என் ஆசைகளுக்கள் முங்கி
மூழ்கி முத்தெடுக்கும் தேடல்!!

உலகிற்கு பயந்து மறைத்த
என் லட்சியங்களின் தேடல்!!

எனக்குள் என்னைத் தொலைத்த
காலங்கள் போதும்!!

ஊர் சொல்லிற்கு அஞ்சி
நடுங்கியது போதும்!!

சுற்றார்களுக்காக நான் போட்ட
வேடங்கள் போதும்!!

இதோ!! இப்போதே
தகர்த்தெறிந்தேன் முகமூடியை. . .

-- புதுமை பெண்ணாய் உருவெடுக்க!!!

எழுதியவர் : ரசிகா (6-Apr-16, 4:03 pm)
பார்வை : 99

மேலே