தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 64

சிந்து சிந்து சிந்து
செண்பகமே தேன் சிந்து
வந்து வந்து வந்து
நெஞ்சில் குன்றாய் குந்து..!

இன்பத்தின் வாசல் திறவாய்
மோகநாடகம் நடத்து சுகமாய்
துன்பத்தின் எல்லை கடவாய்
தூரித உணவாய் திகழ்வாய்..!

வைகறை வானின் காட்சி
வண்ணத் தூரிகை வீசி
வழி அனுப்புது நிலவை
சூரியன் செய்யுது சலவை..!

பாரிஜாத பூக்கள் விரித்து
படுக்கை வேய்வாய்
ஆதிவாசி கோலம் தரித்து
ஆலிங்கனம் செய்வாய்

இதழால் வீணை வாசிப்பேன்
விரலால் கிள்ளி சிலாகிப்பேன்
உடலால் நெருங்கி சுவாசிப்பேன்
மடலால் நெகிழ்ந்து பூசிப்பேன்

பச்சைக்கிளி – பவளக்கொடி
இச்சைப்படி நடப்பேனடி
திட்டக்குடி - திராட்சை செடி
இஸ்ட்டப்படி எடுத்துக்-கடி..!

பூ மழை பெய்யும் அதிகாலை
தேன் மழையில் நனையுது சோலை
பனிமழையில் நனைந்துக் கொண்டே
என்னை நெருங்கிவந்து நெஞ்சணை.!

நான் நல்லவன் என்பது நாட்டுக்குத் தெரியும்
யாவற்றிலும் வல்லவன் என்பதை ஊரறியும்!
நன்மை செய்கிறேன், நட்பில் வாழ்கிறேன்
நாலும் பயில்கிறேன், நன்றி சொல்கிறேன்..!

எழுதியவர் : சாய்மாறன் (7-Apr-16, 6:48 am)
பார்வை : 71

மேலே