நிலவின் கவிதைகள் பக்கம் -03 --முஹம்மத் ஸர்பான்

நிலவே!மனம் விட்டுச் சொல்கின்றேன்.
உன்னை பாடாத கவிஞன் யாருமில்லை
பாட மறந்தவன் கவிஞனே இல்லை

நான் கட்டி பாழடைந்து போன வீட்டில்
தினமும் நீ வருவதால் மெழுகுவர்த்தி ஏற்றாமல்
வெளிச்சம் காண்கின்றேன்.சில நாட்கள்
தொலைந்து போய் விடுவாய்.நானும்
முகவரியற்ற தூணாய் நிலவுக்கு காத்திருக்கிறேன்,

ஊர் தூங்கும் நேரத்தில் நீ விழிப்பாய்
உலகம் விழிக்கையில் நீயும் உறங்கிடுவாய்
பனித்துளிகளில் கறையின்றி நிலைத்திடுவாய்
கோடையில் உருகாமல் வானவில்லின் தோகைக்குள்
ஒளியும் வித்தை யாரிடம் கற்றாய் வெள்ளி நிலவே!

அடர்ந்த நந்தவனத்தில் இளவெனிற்பொழுதில்
இருளின் நயமான விட்டில் ஓசையில்
அனாதையாகும் சிந்தைகள் வான் நிலவே!நீ
மறையும் வரை உதயத்திலும் புதுப்பொலிவு பெறுகிறது

உன்னை தொட்டுப்பார்க்க என் கைகள்
எட்டுவதில்லை.பார்த்துக் கொண்டு
இருக்கவும் இரவு அப்படியே உறைவதுமில்லை
சின்ன பிள்ளைக்கு உன் முகம் சோறூட்டும் தட்டு
எனக்கு நீ கனவில் உதிக்கின்ற தேயாத நிலா

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Apr-16, 11:20 am)
பார்வை : 201

மேலே