ஸ்ரீதுர்முகி - தமிழ்ப்புத்தாண்டு

*
இளம் மங்கையாய் வருகின்றாள்
இளந் தென்றலாய் வருகின்றாள்
உளம் நிறைந்தத் துர்முகி ஆண்டாய்
புதிதாய் பிறந்து வருகின்றாள்.
மாரி பொழிய வைப்பாளா
மண்ணைச் செழிக்க வைப்பாளா?
பாரில் எங்கும் உழவுத் தொழிலைப்
பாங்காய் நடக்க செய்வாளா?
கசந்திடும் நிகழ்வை எங்கும் விலக்கி
பசிப்பிணித்துயரைத் துடைப்பாளா?
வசந்தம் வீசி வருவாளா
வாழ்க்கை செழிக்க வைப்பாளா?
சுற்றுச் சூழல் பாதுகாத்து
சுகங்கள் நல்கிட வருவாளா?
சுற்றம் சூழும் உறவுகள் எல்லாம்
சுகமாய் வாழ்ந்திட அருள்வாளா?

துர்முகி என்றொரு பெண்ணனங்கு
புதுமைகள் படைக்க வருவாளா?.
துயர்முகம் என்றும் காட்டாமல்
இன்முகங் காட்டி வருவாளா?

ஆண்டின் அனைத்து நாள்களிலும்
ஆக்கப்பணிகள் செய்து களிப்பாளா?
கண்மணி அழகிய துர்முகி
கலகங்கள் வென்றிட வருவாளா?.
அறுபதாண்டுகள் கழித்து வருகின்றாள்
ஆனந்தம் அள்ளித் தருவாளா?
சுறுசுறுப்பாகச் சிரித்து சிரித்து
சுந்தரி துர்முகி நீ வா வா!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Apr-16, 6:12 am)
பார்வை : 47

மேலே