சித்திரையே
துன்பங் கண்டோர் சிரித்திட
நாளுது!
தேடல் கொண்டோர் மகிழ்ந்திட
நாளுது!
தமிழ்மொழி தம்மொழி என்றோர்
நாளுது!
சித்திரை யாஞ்சிறப்பு மிக்கநல்
சிந்தை தருமு தல்மாதம்
சோகக் கடலோ வற்றோடிநல்
சிரிப்புநில மாதமிது!
முதல்மாதஞ் சொல்லி நீ
முப்பலகாரம் வாயில் போடு!
ஊர்ஊராய் சுற்றி நீ
உங்கள் திருநாளென கூச்சல்போடு!
கண்மறை வானக்காற்று தினம்
நமக்கு சுவாசந் தருதல்போல்
தமிழரின் சுவாசமா யிந்த
சித்திரையே தின மிருக்கும்!
ஆங்கில புத்தாண்டி லெல்லில்
வானவெடி வெடித்தல் போல்
தமிழ் புத்தாண்டி லெல்லில்
வானவெடி சிவக்க வேண்டாமா?
புத்தாடை நீ கொள்
புத்தாண்டு பிறந்த தென்று!
புத்தாடை மகிழ்தருதல் போல்
புத்தாண்டு மகிழ்வை ரசிப்போமே!