தமிழ்புத்தாண்டு வாழ்த்து

தமிழ்புத்தாண்டு வாழ்த்து

துர்முகி ஆண்டே வருக
நன்மைகள் அனைத்தும் தருக
சித்திரை மாத முதற்நாள்
திகட்டாத இன்பங்கள் பெருக
வற்றாத வளங்கள் வருட
எங்கும் அமைதி நிரம்ப
பிணியற்ற வாழ்வு கூட
புன்னகை அழகு கூட்ட
பாதைகளில் தடைகள் விலக
வெற்றி வாகை சூட
மாற்றங்களை மனதாற ஏற்க
இயற்கை அழியா வண்ணம்
வீடும் நாடும் காத்து
பிணக்கங்கள் மேலும் விலுப்பட
உறவுகள் என்றும் வளர்ந்து
இன்முகம் கொண்டு வரவேற்போம்
இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்

அருண்மொழி

எழுதியவர் : அருண்மொழி (14-Apr-16, 3:15 pm)
பார்வை : 164

மேலே