மணக்கோலம்
மணக்கோலத்தில் என்னை வந்து பார்
என்று சொல்கிறாள்
அனைத்தையும் மறந்தவளாய் !
மெல்ல எழும்பிய
விசும்பல்
ஏனோ
உந்தன் புன்னகையில் ( நிழற்படம் )
தோற்று கரைந்து போயிருந்தது !
ஆண்கள் அழக் கூடாது
என்று போதித்தவள்
அவள் இல்லை என்றால்
எப்படி சிரித்தே இருப்பது
என்பதை போதிக்கவில்லை !
மணமகள் மணமகன்
இடங்களில்
நம் பெயர்களை நிரப்பி
எத்தனை தடவை
அழகு பார்த்திருப்பாய்
அனைத்தும் கலைந்து விடும்
என்று முன்பே தெரிந்து தான் வைத்திருந்தாயோ ?
உன்னை முழுவதும் மறந்து விட்டேன்
என்றே நினைத்திருந்தேன்
இன்றோ உந்தன் மணக்கோலத்தை
பார்த்த பொழுதில்
எட்டி பார்த்த சிறுதுளி கண்ணீர்
பறை சாட்டியது
எந்தன் மனதில் உந்தன் இருப்பை ,,,!