பஸ் வண்டியில் தான்

தேடினான் வேலை
நாடு முழுவதும்
தேர்வு செய்யப்பட்ட
சான்றிதழ்களுடன்
நாயாய் அலைந்தான்
நம்பிக்கையை இழக்காது,
கடைசியில் ஒரு கம்பனி
கைகொடுத்தது காசாளராக
படித்த படிப்பு வேறு
கிடைத்த வேலை வேறு
இனியும் வேலை தேட முடியாது
நேர்மையாக உழைத்தான்
தான் ஒரு அறிவாளி என்பதை
நிரூபித்தான் ,
ஆச்சரியப் படும் வரையில்
அந்தக் கம்பனியின் முதலில்
பங்காளனாக நியமிக்கப் பட்டான்
அதிசயம் ஆச்சரியம் ஆனால் அனுபவம்
அவன் கொண்ட மன உறுதி
அவனை எங்கேயோ உயர்த்தி விட்டது ,
உள்ளத்தில் நேர்மையும் மனதில் உறுதியும் இருந்தால்
என்றுமே நாம் தள்ளாட வேண்டியதில்லை
அவன் இன்று மிகப் பெரிய அந்தஸ்தில்
இருந்தும் அவன் பழமையை
என்றும் மறந்ததில்லை
இன்றும் அவன் பயணம்
அரசாங்க பஸ் வண்டியில் தான்
ஏறிய வேலைத் தளங்களையும்
அடைந்த தோல்விகளையும்
இந்த வெற்றியின் ஏணியாகவே கொள்கிறான்,
இப்போ அவனுக்கு பெண் கொடுக்கவும்
முன் வருகிறார்கள்
ஏன் அவன் முதலாளி அந்தஸ்து உள்ளவன்
கல்வி என்றும் கை விடுவதில்லை
கற்றவனுக்கு என்றும் தோல்வி இல்லை
கல்வியே செல்வம்
'' கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக ''

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Apr-16, 12:48 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : karka
பார்வை : 328

மேலே