நிறம் பெறுகிறது நிலா 3

சுமைகள் விற்றுச்
*** சுதந்திரம் வாங்கினேன்
சொப்பனம் களைந்த
*** விழிப்புணர்வாலெ

தோல்விகள் விற்று
*** வெற்றியை வாங்கினேன்
தொடர்ந்து செய்த
*** முயற்சியினாலே

சிந்தனை விற்றுக்
*** கவிதை வாங்கினேன்
செவ்வந்தி இனங்கள்
*** மலர்ந்தாலே

அழுகையை விற்றுப்
*** புன்னகை வாங்கினேன்
அன்புடன் நண்பர்கள்
*** சூழ்ந்ததனாலே

சோகம் விற்று
*** மகிழ்ச்சி வாங்கினேன்
சுந்தர மழலை
*** மொழிந்ததனாலே

அறியாமை விற்றுக்
*** கல்வி வாங்கினேன்
ஆசான் தந்த
*** போதனையாலே

சினத்தை விற்று
*** அன்பு வாங்கினேன்
செய் எனை ஈன்ற
*** அன்னையினாலே

அவதிகள் விற்றுப்
*** பொறுமை வாங்கினேன்
ஆன்றோர் தந்த
*** அருள்மொழியாலே

கவலைகள் விற்று
*** நிம்மதி வாங்கினேன்
கடவுள் சந்நிதி
*** திறந்ததனாலே

வாங்கிய அனைத்தும்
*** விட்டுவிட்டேன் அவள்
வாள்முனை விழிகள்
*** தாக்கியதாலே !

1994

மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (18-Apr-16, 7:26 am)
பார்வை : 148

மேலே