நினைவுகளில்

எங்கும் நிறைந்திருக்கும் ...
அனாதையாய் நீ இருந்தாலும்
உன்னுடனே உறைந்திருக்கும்....

கண்ணாடி பார்த்து
சிரிக்கவும் வைக்கும்...
காகிதம் பார்த்து
கலங்கவும் வைக்கும்....

சில சமயங்களில்
தாலாட்டும்...
பல சமயங்களில்
போராடும்....

சில நேரங்கள்
சிரிக்க வைக்கும்...
பல சமயங்களில்
அழவும் வைக்கும்..

சில பொழுதுகளில்
வாழ வைக்கும்
பல பொழுதுகளில்
சாகவும் தூண்டும்...

எத்தனை பூட்டு போட்டாலும்
உள்ளத்துள் நுழைந்திடுமே...
திருடிடும் பொருளும் அல்ல
தினம் அது வளர்ந்திடுமே...

உன்னுடனே ...
உனக்குள்ளே ...
உறைந்திருக்கும்...
உயிர் உள்ளவரை

இதுவே நினைவுகளின் நிதர்சனம்...

எழுதியவர் : Geetha paraman (18-Apr-16, 7:07 pm)
Tanglish : nenaivugalil
பார்வை : 121

மேலே