தேர்தல் 2016 - 2

மக்களால் மக்களுக்காக
ஏற்படுத்தப்படும்
ஆட்சியென்று ஒன்று

இது நாள் வரை வந்தது போல்
வருவதை விட

மாட்சியுடன் மாண்புடன்
மாற்றம் வரட்டுமென்று

மக்களால் மக்களுக்காக
மாசற்ற ஆட்சியொன்று
ஏற்பட முடியுமா?

நல்லதே நடக்க வேண்டும் என்று
நாட்களெல்லாம் நவிலுகிறார்கள்;
அந்த நல்லது என்பதென்ன என்பதிலே
ஆளுக்கொரு அவதாரமெடுக்கிறார்கள்:

2014 தேர்தலிலே அப்படியொரு
நல்லது நடக்க வேண்டி விருப்பு
யாருமே தெரிவிக்காத போது

2016 தேர்தலில் அப்படியொரு
மாற்றம் வருமென்று இப்போது
எதிர்பார்க்க முடியாது தான்..!

50 ஆண்டுகள் சீர் கெட்டது
என்பதை கண் திறந்து பாருங்கள்;
திராவிடம் என்பதே விடம்
என்று ஒதுக்கவே முடியாது..!

மொத்தத்தில் தேர்தல்
இங்கே கண்காட்சியாய்,
ஏச்சுக்களும் பேச்சுக்களும்
அடிக்கிற வெயிலை விட
அதிகமாய் வாட்டி வதைக்க

வாக்காளர்கள் மனசுக்குள்ளேயே
எல்லோரையும் நோக்கியபடி
"நீ மட்டுமென்ன யோக்கியமா?"
என்று கேட்பதும் தெளிவாகிறது..

இருந்தும் எல்லோருக்கும் ஒரு வருத்தம்,
இந்த இம்சை இவ்வளவு நாள் தேவையா?
ஏன் எலக்சென் கமிஷன் இப்படி தேர்தலை
இவ்வளவு லேட்டாய் வைத்தது?

சீக்கிரம் ஓட்டை போட்டு விட்டு
அவரவர் வேலையை பார்க்கலாம்
என்று ஆசுவாசப்படுகிறார்கள்.
ஊடகங்களில் நாள் பூராவும்
இம்சை, இம்சை, இம்சை மட்டுமே..!

இலவசங்களுக்காக இங்கு யாரும் ஏங்கவில்லை.
இவர் வந்தால் தான் நல்லது என்று அறுதியிட்டு சொல்லவும்
இங்கே இன்னும் இயலவில்லை..

பெய்யும் மழையிலும் அடிக்கும் வெய்யுலுக்கும்
இறைவனை கூட இங்கு யாரும்
நம்பத்தயாரில்லை,
ஏதோ ஒரு க வந்தாலும்
எங்களுக்கு கா தான்.
ஆளை விடுங்கள்..
அட, ஆளை விடுங்கள் சார்...

- செல்வமணி.

எழுதியவர் : செல்வமணி (19-Apr-16, 12:28 am)
பார்வை : 73

மேலே