இல்லை அது இலையென - - - - - சக்கரைவாசன்

இல்லை அது இல்லையென
*********************************************************
இல்லையது இல்லையென எழுந்து நிற்கும்
எண்ணரிய சோதனைகட் கெல்லாம் ஏற்ற
நல்லறிவின் பதிலுரையை நயமாய்க் கேட்டு
நாத்திகனாய் மாறிவிட்ட நானே தன்னுள்
வல்லமை எல்லாம் ஒடுங்கி வலுவற்றோனாய்
வந்தலைக்கும் விதிச்சிக்கல் வழியைத் தேக்க
அல்லல்களுக் காற்றாமல் அரற்றும் போதில்
அபயக்கரம் தனைநீட்டற்கு யாரும் காணேன் !

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Apr-16, 9:20 am)
பார்வை : 45

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே