சுற்றுலா

அதிசயம் நிறைந்த இடங்கள்
தினமும் செய்தி வருது..

வருடம் முழுவதும் உழைக்கிறாய்
உழைத்ததின் பலனாய் நீயும்
குடும்பத்தோடு கொண்டாடு
சுற்றுலா சென்று ஆனந்தம் கொள்

இல்லாளின் முகத்தில்
இன்பத்தை பார்

குழந்தைகள் முகத்தில்
குதூகளம் பார்

பெரியோர்கள் முகத்தில்
பரவசம் பார்

பார்த்து வந்த இடங்களை
பட்டியல் போட்டு அசை போட்டுக்கொண்டே
அடுத்தடுத்த தினங்கலெல்லாம்
அழகாய் செல்லும்
மகிழ்ச்சியை பார்

கஷ்டம் துன்பம் கவலை மறந்து
சுற்றி பறக்கும் பறவை போல‌
சுற்றுலா சென்று
நாமும் சுகமாய் வருவோம்..

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (19-Apr-16, 5:13 pm)
Tanglish : sutrulaa
பார்வை : 890

மேலே