புகை உயிருக்கு பகை

புகையிலைத் தோட்டம்
ஏன் எதற்க்காக புகையிலை
அதன் பயன் என்ன
புகை பிடிக்காதீர்
புகை உயிருக்குப் பகை
புகை பிடிப்பவரின் அருகில்
இருப்பவருக்கும் தீமை
என்றெல்லாம் எச்சரிக்கை,

ஆனால் புகையிலை விளைவிக்க
அதை ஊக்குவிக்க எவ்வளவு செலவு செய்து
நாள்தோறும் பாடு பட்டு
அதைப் பக்குவப் படுத்தி
விற்பனைக்கு விடுகிறார்கள்
உணர்ந்தும் உணராத மக்கள்
எத்தனை ரகங்களில் புகையிலை
விற்றாலும் வாங்கிப் புகைப்பதற்கு
தயாராகி நிற்கின்றனர்
அதில் என்ன மோகமோ தாகமோ
தெரியாதும் தெரிந்தும் விட்டுவிட
முடியாத நிலையில் தவிக்கின்றனர்

விஷம் என்று தெரிந்தும்
புகையில் அவ்வளவு திருப்தி
புகை மனிதனின் பகையாளி
இதை உற்பத்தி செய்பவன்
தன் சுய நலத்திற்காக
பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்திற்காக
எவன் எப்படி அழிந்தாலும் பரவாயில்லை
என்று தான் உழைத்திட வகை தேடி
மிகபெரும் வர்த்தக செடியாக கருதி
புகையிலையை உற்பத்தி செய்கிறான்
,
புகையிலையை உற்பத்தி செய்பவன்
சம்பாதித்துக் கொள்கிறான்
அதை வாங்கி புகைப்பவனோ
கொஞ்சம் கொஞ்சமாக
தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்
இதில் நாகரீகம் வேறு
ஒருவரைப் பார்த்து ஒருவர் புகைக்க ஆரம்பித்து
கடைசியில் இதில் கண்ட சுகம் என்ன
புகைக்காதே உன்னை நீயே பகைக்காதே

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Apr-16, 12:01 am)
பார்வை : 350

மேலே