உழவன்

உழவன்
..........

விதைப்பதா, சமைப்பதா
விதைநெல்லின் முன்
விவசாயி.

வானம் பார்த்த பூமி
பொழிந்தது மழை
உழவனின் கண்களில்.

அவன்
உயிர் தெளித்தான்
உயிர்த்து எழுந்தன
கதிர்கள்.

இரவு பகல் பாராத
உழவனின் உழைப்பு...
அதற்கு மரியாதையாய்
நெற்கதிர்களின் தலைசாய்ப்பு.

உழவனின் நிலைகண்ட
பச்சைப் பயிர்கூட
காய்ந்தே முதிர்கின்றன.

சோற்றில் உப்பிடாதீர்.
அது
விதையாக மண்ணில்
விழுந்த காலம் முதல்
உழவன் தன் கண்ணீரை
காணிக்கையாக்கியிருக்கிறான்
உப்பாக!

பயிர் வளர்த்து
உயிர் கொடுத்த
உழவனின் வாழ்க்கை
வளரவே இல்லை
எவ்வளவோ உரமிட்டும்.




- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (23-Apr-16, 7:06 am)
Tanglish : uzhavan
பார்வை : 223

மேலே