வலியோடு வெற்றி
ஒரு புத்தம் புது வேளையின்
காலை பொழுதுகளில்
காற்றில் நகர்கிறது ஒரு காதலனின்
நாளைய நம்பிக்கைகள்........
அந்த விழுதுகளின் மீது தான் பார்வை
தப்பிப் பிழைத்த அவன் நினைவுகளில்
வாழ்ந்து வரும் ரகசியங்களை நேசித்த கதை...
தூங்கி எழும் போதெலாம் இன்று மட்டும்
தாங்கி கொள்
நாளை உனதாகலாம் என்ற சிறு பொறி மட்டும்
பட்டுத் துளிர்க்கும்.....
தொடர்ந்த தேடுதலால் சில சமயம்
காணாமல் போய் தானே கண்டெடுத்துக்
கொள்வான்....
வாயுரையும் பேரில் நாக்கொள்ளாமல்
மனதின் போக்கில் பிரவாகமெடுக்கும்
உண்மைக்குத்தான் அவன் செவிமடுப்பான்...
நிச்சயமற்ற பொழுதுகளையும்
தீண்டப்படாத நம்பிக்கைகளையும்
தூக்கில் போட எத்தனிப்பான்.....
அன்புக்கும் அமைதிக்கும்
ஏங்கும் மனதுள்
நீலம் பாரித்த நினைவுகள்
எல்லாம் சரி ஏனிந்த பொழுதோடு
அவனுக்கொரு சீற்றம்
வாழ்வுக்கு தேடிய பொருள்களோடு
வசதியாய் வந்து சேர்ந்த சுகங்களை
அழித்துப் போடும் எண்ணங்களை ஈந்த
பொழுதுகளை என்ன செய்ய?
இப்படிச் செய்தால்.....
உன்னை
நெசவுக்கு விட்டு நெய்து விடு
நம்பிக்கை நாற்றங்காலை நட்டு விடு
ஏற்றங்கள் உண்டு எட்டிப்பார்த்துக்
கற்றுக்கொள்
மாற்றங்கள் உண்டு மறுபடியும்
முயற்சி செய்....
அதற்கே பயிற்சி செய்
விண்ணை முட்டு
மண்ணைத் தட்டு
உன்னைக் கொட்டு
உலகைக் கற்று.....
வானமும் பூமியும் வளையும்
நாள் வரை நீளட்டும் உன் நம்பிக்கைகள்.....
நிச்சயம் வெல்வாய்
வாழ்வின் கனவை.............