காதல் என்பது - 3

காதல் என்னும்
மாய உலகில்

தவழ்ந்து விளையாடும்
இவர்களை பற்றி

இன்னும் இதோ,

அவனின் அனைப்பில்
நிம்மதி பெற்றாள்

தன் பெண்மைக்கு
காவலன்
அவனே என்றாள்

தன்னை புரிந்து
தன் மனதை அறிந்த

இவனை தன்னிடம்
சேர்த்த

அந்த ஆண்டவனுக்கு
நன்றி கூறினாள்

அதன் மூலம்
இறைவனையும்
சாட்சி ஆக்கினாள்

தன் கனவைப் பற்றி,
லட்சியம் பற்றி,

தன் நிலை மறந்து
அவனிடம் சரளமாய்
சொன்னாள்

தனக்கு சகலமும்
அவன் தான் என்று

அவனுக்கு புரிய
வைத்தாள்

உணரவும் வைத்தாள்

காதல் உணர்வின்
அடுத்த கட்டத்தை

நோக்கி நகர நினைத்தாள்

அவன் முக பாவத்தை
படிக்க துடித்தாள்

காதல் மயக்கத்தில்
இருந்த அவனோ

அவளின் வார்த்தைகளுக்கு
எப்படி செவி சாய்த்தான்


(தொடரும்)

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (24-Apr-16, 8:05 am)
பார்வை : 90

மேலே