‎சின்ராசு‬

"அய்யா.. அய்யா.. "
“அட... தென்னத்துக்கு இப்ப கெஸ்சு கெஸ்சுன்னு ஓடியாறே.."
"நம்ம நமீதா இருக்குதுல்லங்.. அது அதிமுகவுல சேந்து போட்டுதாமா.. "
" நம்ம நமீதாவா.. அதாரு கம்பி வெளம்பரத்துல தூணாட்டமா ஒரு புள்ள வருமே...அதுவா... அது கட்சில சேந்தா நீயென்னத்துககு இப்ப டையின் டையின்னு ஆடறே"
"நம்ம மாவட்டத்துலயே பஸ்ட்டு பஸ்ட்டு எங்க தலைவிக்கு நற்பணி மன்ற போர்டு வெச்சது நாந்தான்னு உங்களுக்குத் தெரியுமுல்லங்"
"ம்.. அதுவும் தெரியும்... அதுக்கு உங்கம்மா சீவக்கட்டையத் தூக்கீட்டு உன்னையத் தொரத்துனதும் தெரியும்"
"இப்ப நாளைக்கே எங்க தலைவி மந்திரியானா நானெல்லாம் எம்எல்லே ஆயிருவனுங்.."
"நீ திருவாத்தானாட்டப் பேசுனாலும் நீ சொன்னதெல்லாம் நடக்காதுன்னு சொல்ல முடியாதுரா... ஏன்னா நம்ம வரலாறு அப்பிடி"
"அப்ப சான்சு இருக்குதுன்னு சொல்லுங்க"
"ஆமாமா... அதுக்குன்னு மம்முட்டியக் கீழ போட்டுட்டு மயறே போச்சுன்னு ஓடீறாத... போயி சீட்டு வார வரைக்கும் தண்ணியக் கட்டு போ"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (24-Apr-16, 10:14 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 89

மேலே