உழைப்பு

உழைப்பதே உன்னதக் கலை
அதுவே வெற்றிக்கு விலை
காணத் துடிப்பதல்ல கனவு அது
கைகூடும் வரை கண்மூடாத உணர்வு
முழுமை பெற முடிப்பது தான் முயற்சி என்பதல்ல
முடங்கி விடாமல் முயல்வதே புதுப்பயிற்சிதான்
துணிந்தபின் ஏதடா துயரம்
நீ துளைக்கத் துடங்கினால்
ஒருநாள் உன் துடைப்பம் தொடும் சிகரம்
கூட்டிப் பெருக்கினால் கூடப் பெருகும்
அன்று உணர்வாய் உன் உயரம்
அடியோடு மடியும் அப்போது உன் துயரம்
துணிந்த பின் ஏதடா துயரம்
விடியும் என்று நம்பு
வீறு கொண்டு எழும் புதுத்தெம்பு
நம்பிக்கையே நாடித் துடிப்பு
இதுவே நாடறிந்த படிப்பு
வெளிவரட்டும் வியர்வைத்துளி
அதுவே வெற்றிக்கு வழி
உண்ணும் உணவு என்ன அருமை அதுவே
உணர்த்தும் உழைப்பின் அருமை

எழுதியவர் : வைரதாசன் (25-Apr-16, 12:17 pm)
Tanglish : ulaippu
பார்வை : 531

மேலே