சிந்துப்பாடல் --- வளையற் சிந்து --- 3
சோலைதனில் நின்றிடவே
சோகமது மாறும் -- மனச்
சோர்வுகளும் தீரும் -- தினம்
சொர்க்கமது பாரும் -- உயர்
சொந்தங்களும் சேர்ந்திடவே
சோர்விலாது வாரும் .
காலையிலே திங்களன்றுக்
கன்னித்தமிழ்த் தந்து -- நல்
கல்விதனில் முந்து -- நனி
கவிதனிலே வந்து -- தினம்
காசினியும் போற்றிடவே
கற்பித்தலோ சிந்து .