ஞான வாசிட்டம் - 15

மனம் என்பது யாதென
வசிட்டர் கூறுவது
ராமனுக்கு:
உருவமிலாதது
பொய், மோகம், மலம், பந்தம்
என்பவை இணைந்து
அவித்தை ஆகி
அதனால் நிரம்பியது
ஆகாயம் போலதற்கு
உள்ளும் புறமும்
வடிவமொன்றிலை
மெய், பொய் இரண்டின்
தோற்றமது
தொடர்ந்த சங்கற்பம்
உள்ள இடத்தில் தோன்றுவது
அவித்தையும் மாயையும்
தமோ குணம் இணைந்து
சங்கற்பமானது
சங்கற்பம் நசித்திட
கான்போனும் காணப் படுவதும்
நீங்கி ஆங்கே
பிரம்மம் பிரகாசிக்கும்!
நிற்பன, நடப்பன, ஆடுவன
எவை புணர்ந்தும்
அசையாது நிற்கும்
கண்ணாடி தனைப்போல்
நீ..நான்..அதுவெனும்
வேற்றுமை நீங்கி
நசித்திருந்தால்
அதுவே
பேரின்ப விடுதலையாம்
ஒப்பற்ற கைவல்யமெனும்
பெரு விடுதலையாம்
வேற்றுமை எண்ணமும்
பேத பாவனையும்
நீங்கிய சுயம் ஒளி பெறும்
அதுவே
சுயம் பிரகாசமும் ஆகும்!
மனம் அழிபடும் காலம்
அறிக:
கனவினில் வரும் கனவு போல
காண்பதற்கு உருவமிலாத
மனம் ..
இல்லாத காட்சிகள் காட்டும்
ஒன்றில் நிலைக்காது
அசையும் ..பிரகாசிக்கும்..
அழும்..சலனமுறும்..
போகும்..மீளும்..
செருக்கு கொள்ளும்
அகங்காரம் கொள்ளும்..
பிரளய காலத்தில்
ஆகாயமும் அழியும்
சாந்தம் எஞ்சும்..!