இதுவும் காதல்
இலை உதிர்த்த
சோலை
ஒன்றில்
என் நினைவும்
உன் நினைவும்
கைகோர்த்து
நடந்து
செல்ல
பின்னே
நீயும் நானும்
தொலைவில்
இருந்து
ரசித்துக்
கொண்டோம்.
உனக்கும்
எனக்குமான
இடைவெளியில்
நம்மைக்
கண்காணித்த படியே
கால் மேல் போட்டு
கம்பீரமாக
உட்கார்ந்திருக்கும்
நம் சுய
கௌரவத்தின்
கண்ணில்
மண்ணைத்
தூவியபடி ..