ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்...

ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்

சிறுவயதில் பென்சிலைத் தொலைத்துவிட்டு,
நாள் முழுவதும் தேடினேன், தேடினேன், தேடிக் கொண்டே இருந்தேன்...

இளைஞனான உடன் பைக்கைத் தொலைத்தேன்,
தேடினேன், தேடினேன், காவல்துறையை அணுகினேன், தேடுகிறார்கள்...

பென்சில் கிடைக்கலாம், இல்லையெனில் இன்னொன்று வாங்கிவிடலாம்,
பைக் கிடைக்கலாம், இல்லையெனில் இன்ஷுரன்ஸில் மற்றொன்று வாங்கிவிடலாம்.

உடன் வந்த உறவுகளையும், இடையில் வந்த உறவுகளையும்,
அறிந்தோ, அறியாமலோ காரணங்கள் இன்றி, தொலைத்து விடுகிறோம்.

காரணங்கள் தேடுவதை விடுத்து, அந்த உறவுகளைத் தேடுவோமே,
காவல் துறையோ, இன்ஷூரன்ஸோ, ஈடு செய்ய இயலுமா இழந்த உறவுகளை.

இழந்ததை உணர்வோம் முதலில், பின்னர் தேடுவோம் அவ்வுறவுகளை,
உணர்ந்தபின் உறுதிகொள்வோம், மீண்டும் உறவுகளைத் தொலைக்காதிருக்க.

தொலைக்கக் கூடாத ஒன்று உறவுகளே,
உன்னைத் தொலைப்பதும், உறவுகளைத் தொலைப்பதும் ஒன்றே.

ஒன்றே செய்வோம், நன்றே செய்வோம், இன்றே செய்வோம், உறவுகளைப் போற்றுவோம்.

எழுதியவர் : நட்புடன் (19-Jun-11, 6:40 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 920

மேலே