அளவோடு குடித்து வளமோடு வாழ்வோம்
மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத்தத் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மொடாக்குடி மாடசாமியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதி:
அன்பார்ந்த தமிழ்ப் பெருங்’குடி’ மக்களே. எங்கள் கட்சியின் கொள்கை “அளவோடு குடித்து வளமோடு வாழ்வோம்” என்பதே. எங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்: சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்:
1. மது விலக்கை அமல்படுத்தமாட்டோம்.
@@
2. அளவோடு குடித்து வளம் பெற்று வாழும் நிலையை ‘குடி’மக்களுக்கு உருவாக்குவோம்.
@@
3. குடித்துவிட்டுக் குற்றம் புரிவோர்க்கு கடுமையான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு அவர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தி தமிழகத்தை வளமான தமிழகமாக மாற்றுவோம்.
@@
4. தாய்க் குலத்தைக் கேலி செய்வோர்க்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.
@@
5. மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும். தேச துரோக வழக்கும் பதிவு செய்யப்படும்.
@@
6. பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு ஆயுள் தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.
@@
7. கற்பழிப்பில் ஈடுபடுவோர்க்கு குற்றம் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டால் மேல் முறையீட்டுக்கு வழி இல்லாத வகையில் சட்டம் இயற்றப்பட்டு மரண தண்டனை வழங்கப்படும்.
@@
8. பொது இடங்களில் தலவைர்களின் காலில் விழுந்து வணங்குவது, குனிந்து நின்று வணங்குவது, ஹெலிகாப்டரில் செல்லும் தலவைருக்கு மரியாதை காட்டும் நோக்கத்தில் வானத்தை நோக்கி வழிபடும் செயல், அடிமைகளைப் போல் நடந்து கொள்வது அல்லது நடத்தப்படுவதற்கெல்லாம் தடைவிதிக்க தனிச்சட்டம் இயற்றப்படும்.
@@
9. இந்தத் தேர்தலில் கட்சிகள் எல்லாம் சிதறி, உடைந்து நிற்பதால் வாக்குச் சிதறல்களின் விளைவாக எங்கள் கட்சி 234 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் பதவி ஏற்றவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு செல்வில் மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருள்கள் / அல்லது விலைக்கு விற்கும் பொருள்கள் அவற்றை மூடியிருக்கும் அட்டைப் பெட்டிகளில்/பைகளில் முதல் அமைச்சரின் பெயரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சிடுவது அல்லது அவரது படத்தைப் போடும் செயல்களுக்கு தடை விதித்து அது போன்ற சுயவிளம்பரங்களை எக்காலத்திலும் எந்தக் கட்சியும் செய்யாத வகையில் சட்டம் இயற்றப்படும்.
@@@
10. பொதுக் கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் மக்களை கூலிக்கு அழைத்துச் செல்வோர்க்கு ஆயுள் தண்டனையும் 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்க தக்க சட்டம் நிறைவேற்றப்படும்.
@@
11. பொதுக் கூட்டங்களை மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை நடத்தவே அனுமதி வழங்கவும், பொதுக் கூட்டங்களுக்குச் செல்வோர் கூட்ட நெரிசலில் இறக்க நேர்ந்தால் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் இறக்க நேரிட்டவரின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் தக்க சட்டம் இயற்றப்படும்.
@@
12. தெருக்களில் விளம்பரம் செய்து நகரங்களின் அழகைக் கெடுபோர்க்கு கடுமையான தண்டனை வழங்க தக்க சட்டம் இயற்றப்படும்.
@@
13. இயற்கைக்கு எதிரான செய்லகளில் ஈடுபடுவோரை அவர்கள் ஆயுள் உள்ளவரை அவர்களைத் திறந்த வெளி சிறைச்சாலைகளில் வைத்து வன வளத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட வைக்கும் சட்டம் நிறைவேற்றப்படும்.
@@@@
எங்கள் கட்சியின் பிற தேர்தல் வாக்குறுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
@@@@@
மொடாக்குடி என்பது நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர்
@@@
எனவே நான் மொடாக்குடி மாடசாமி
@@@@
அளவோடு குடித்து வளமாக வாழ்பவன் நான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க . மதுவை ஒழிக்க.

