போதும்

தாத்தாவுக்கு நான் அருகே உட்கார்ந்தாலே போதும்
பாட்டிக்கு கதை படித்து காட்டினால் போதும்
அண்ணனுக்கு அவன் சொல்படி கேட்டால் போதும்
அக்காவுக்கு அவள் அழகி என்று சொன்னால் போதும்
தம்பிக்கு அவனோடு விளையாடினால் போதும்
தங்கைக்கு என் பங்கை கொடுத்தால் போதும்
அப்பாவுக்கு மதிப்பெண் வாங்கினால் போதும்
என் அம்மாவுக்கு
நான் மீதம் வைக்காமல் சாப்பிட்டாலே போதும்.