ஏங்க நீங்க இப்படின்னு, கேளுங்க

ஒரு அரசாங்க அதிகாரியின் சட்டையைப் பிடித்து விட்டால் கூட, உள்ள தூக்கி போட்டுருவேன் ன்னு மிரட்டும் ஊரில் தான், பொதுமக்களை தடியால் அடிக்க மட்டும் அனுமதி தரப்படுகிறது.

ஒரு சினிமா படத்தை தடை செய்யக் காட்டப்படும் ஆர்வத்தில் பாதி கூட, மதுவை தடைச் செய்யக் காட்டப்படுவதில்லை.

அரசியல் பிரச்சாரம் என்ற பெயரில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் ஊரில், அறநிலையில் கூட எந்த ஒரு நியாயமான போராட்டமும் செய்யமுடிவதில்லை.

இருப்பவனுக்கு வரிச்சலுகை வழங்கிவிட்டு, இல்லாதவன் வாயில் இலவசத்தை வைத்து அடைத்து அவனைப் பிச்சைகாரனாக்கி அழகு பார்க்க முடிகிறது.

ஏதோ ஒரு கேரளப் பெண் சொன்னதும், யாருக்குமே தெரியாமல் பொய்வழக்கில் ஒரு தமிழனை சத்தமே இல்லாமல் கைது செய்ய முடிந்த ஊரில், சில உண்மை வழக்குகளில் நீதியை நிலைநிறுத்த முடியவில்லை.

மீனவன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லா விட்டாலும், அவனைக் கொன்று குவிக்க, இலங்கைக்கு போர்க் கப்பலும் தந்து கடற்படை வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருக்கிறது.

இலவச கல்வி என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு பல தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வியை கூவி விற்க அனுமதி தந்துவிட்டு “இது காலத்தின் கட்டாயம் என்று” நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்...

விவசாய நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு எங்கள் நாடு பொருளதார நிலையில் மேல்நோக்கி உள்ளது என்று பெருமிதம் கொள்கிறோம்...

உழவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நலத்திட்டங்கள் இல்லாவிட்டாலும், அவர்களின் நிலங்களை மலடாக்கும் கெயில் காஸ் திட்டத்தை ஆதரிக்கும் அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை
உண்டு.

மறந்து கொண்டே இருப்பது நம் இயல்பு.

நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது நம் கடமை....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (28-Apr-16, 8:25 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 201

மேலே