நாஞ் ஜெயிக்கறதுக்கு ஒரு வழி சொல்லுங்கண்ணே

அண்ணே என்ன எதுத்து மொத்தம் அஞ்சு கட்சி வேட்பாளர்கள் நிக்கறாங்க. அந்த அஞ்சு பேருமே செல்வாக்கும் பண பலமும் உள்ளவங்க. நாந் தோத்துப் போய்டுவோனோன்னு பயமா இருக்குதண்ணே. நாஞ் ஜெயிக்கறதுக்கு ஒரு வழி சொல்லுங்கண்ணே.
@@
தம்பி நீ ஜெயிக்கறதுக்கு ஒரே வழி தான் இருக்குது.
@@
அது என்ன வழின்னு சொல்லுங்கண்ணே.
@@@
மொதல்லே நீ கண்டிப்பா ஜெயிப்பங்கற நம்பிக்கை உனக்கு இருக்கணும். அடுத்து நீ செய்ய வேண்டியது...
@@@@#
நாஞ் செய்ய வேண்டியது என்னன்னு சீக்கிரம் சொல்லுங்கண்ணே.
@@@
நீ தேர்தல் முடிஞ்சு தேர்தல் முடிவு அறிவிக்கற வரைக்கும் வாரத்துக்கு மூணு சத்ரு சம்ஹார யாகம் நடத்தணும். இந்த யாகத்தை நீ நடத்திட்டு வந்தா கண்டிப்பா அதிக வாக்கு வித்தியாசத்திலே நீ ஜெயிப்ப. உன்ன எதுத்து நிக்கற அஞ்சு பேருக்கும் டெபாசிட் பணங்கூடக் கெடைக்காது. அவுங்க அஞ்சு பேருந்தா உனக்கு சத்ரு (பகைவர்/எதிர்ப்பவர்கள்)
@@@@
நன்றி அண்ணே. சத்ரு சம்ஹார யாகத்தை நா நாளைக்கே ஆரம்பிச்சிடறேன். ஜெயிச்சதுக்கப்றம் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யறதா நா அங்காளம்மனுக்கு வேண்டுதல் வச்சிருக்கறென் அண்ணே.

எழுதியவர் : மலர் (29-Apr-16, 11:17 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே