வெப்ப அலை வீசுது - வடநாடு எஸ்டேட்டுக்குப் போறேன்

தலைவரே இன்னும் வாக்குப் பதிவே முடியல அதுக்குள்ள உங்க பிரச்சாரத்தை முடிச்சுட்டு வடநாடு எஸ்டேட்டுக்கு போறேன்னு சொல்லறீங்களே

நம்ம கட்சி வேட்பாளர்களின் நெலமை என்ன ஆகறதுங்கய்யா?
@@@
யோவ் தமிழ் நாடு முழுவதும் வெப்ப அலை வீசுது. என்னாலே தாங்க முடியல. நம்ம கட்சியோட தேர்தல் வாக்குறுதியே பொதும்யா நாம 234

தொகுதிலயும் ஜெயிக்கறதுக்கு. அதோட நமது வேட்பாளர்கள் அனைவரையும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை சத்ரு சம்ஹார யாகம் செய்யச்

சொல்லுய்யா. நம்ம ஆளுங்கள எதுத்து நிக்கற யாருக்கும் டெபாசிட் பணம்கூட திரும்பக் கிடைக்காது. எனக்கு இந்தியா முழுவதும் 20 எஸ்டேட்டுகள்

இருக்குது. எனக்கு ரொம்பப் பிடிச்ச வடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ஓய்வு எடுக்கப் போறேன். தேர்தல் முடிவு தெரிங்சதும் முதல்வர் பதவி ஏற்க தனி

விமானத்திலே வந்திடுவேன். அது வரைக்கும் நம்ம கட்சி ஆளுங்கள நல்லா கவனிச்சுக்கறது உம்மோட பொறுப்பு.
@@@
சரி போய்ட்டு வாங்கய்யா. மே 20 ஆம் தேதி வெற்றிக் கனி பறிக்க வாங்கய்யா வருங்கால முதல்வராக.

எழுதியவர் : மலர் (30-Apr-16, 10:50 am)
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே