பறவையின் எச்சம்

அகண்ட வானில் சுதந்திரச்சிறகுவிரித்து
பறந்துதிரியும் ஏதோவொரு
பறவையின் எச்சம்
எழுப்பியிருந்த பெருமரத்தின்
நிழலில் அமர்ந்தபடி
பறவையை உற்றுநோக்குகிறேன்
அதனிடத்தில் எந்தச்சலனமுமில்லை...!

அதிகாலை விழித்தெழுந்து
கானங்கள் இசைத்தபடி
சிறுசிறு சுள்ளிகள் சேகரித்து
அலகுகளால் கூடமைத்து
குஞ்சுகளுக்காய்
நெடுந்தூரம் பறந்து
இரைதேடிக் களைத்து...

சிறகு முளைத்த குஞ்சுகளுக்கு
பறப்பதற்கும் வாழ்வதற்கும்
எதிர்கொள்ளத் துணையிருந்து

ஆகாய வெளிகளூடே
சிறகுவிரித்துப் பறக்கும் குஞ்சுகளை
ரசிக்கும் பறவைகளிடத்தில்
எப்போதுமெனக்கு இலயிப்புண்டு...

அவை...
என் தந்தையை
ஞாபகமூட்டிவிடுவதால்...
-------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (1-May-16, 9:20 am)
Tanglish : paravaiyin echcham
பார்வை : 119

மேலே