மொழியில்லா மொழி

வண்டுக்குப் புரியும்
பூவின்மொழி
காற்றுக்குப் புரியும்
மரத்தின் மொழி
அலைகளுக்குப் புரியும்
ஆழ்கடலின் மொழி
நிலவுக்குக்குப் புரியும்
இரவின் மொழி
தாய்க்குப் புரியும்
சேயின் மொழி
புரிதலும் ரசனையும்
இருக்கும் மனங்களுக்கு
மட்டும் மௌனம்
என்பது மகத்துவமான
மொழி
அமைதி இருக்க
ஆர்ப்பாட்டம்
எதற்கு..
இரு வேறு சிந்தனைகளில்
இயங்குபவர்களின்
பொது மொழிகளாய்
இருப்பதில்லை மௌனம்.
ஐயப்பாடுகள் சஞ்சலங்கள்
ஆரவாரங்கள்
கடந்த மன வெளிகளில்
மாத்திரம் மௌனம்
குடி கொள்கிறது.
அங்கே பேசிக்கொள்வது
உணர்வுகள் மட்டுமே..

எழுதியவர் : சிவநாதன் (1-May-16, 7:03 pm)
பார்வை : 344

மேலே