புதியதோர் உலகம் செய்வோம்

கிழக்கே ஜனனம்
மேற்கே மரணம்
ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறப்போம்
சூரியனைப் போல;
இரவு நிலா
வான் உலா
இருளிலும் விளக்காவோம்
சந்திரனைப் போல ;
விழுந்த போதெல்லாம்
எழுவோம்
விதையைப் போல;
பிறரை அடித்தாலும்
காற்றாய் இருப்போம்
எல்லாரும் இன்புற்றிருக்க;
பறவையாய் பறப்போம்
எல்லைகள் கடந்து;
எங்கே ஓடினாலும்
தாகம் தீர்ப்போம்
நதியைப் போல;
பிறர் நலம் பேண
இறங்கி வருவோம்
மழையைப் போல;
எதிரியே நடந்தாலும்
சுவட்டை மறைக்க மாட்டோம்
தடத்தைப் போல;
முடிந்த வரை
பிறர்க்கு விழியாய்
இல்லாவிடினும்
பழியாய் இல்லாமல் இருப்போம்;
அறிவியலை அறியுமுன்னே
அக வியலை அறிவோம்;
புதியதோர் உலகம் செய்வோம்
பொதுவுடமைச் சமுதாயம்
திசையெட்டும் சேர்ப்போம்