10 செகண்ட் கதைகள் - யார் அழகு

சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு நாள் யார் அழகு என்று போட்டி வந்தது.
இதை தீர்க்க பிரம்மனிடம் போனார்கள்.

அவன் நான் தீர்க்கிறேன் என்று தர்ப்பை புல்லை விட்டெறிந்தான்
அது வீழ்ந்தது திருப்புன்கூர் என்ற ஊரில்.

அது சீர்காழி வட்டம் வைதீஸ்வரன் கோவிலிலிருந்து அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . அந்த புல் விழுந்த இடத்தில் அழகிய சுயம்பு லிங்கம் & தேவி தோன்றினார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்த போது இருவரும் அழகாகத் தோன்றினார்கள். சர்ச்சை தீர்ந்தது.

இந்த கோவிலில் உள்ள நந்தி மிக அழகான வேலைப்பாடு அமைந்ததது .
ஒரே கல்லில் உண்டாக்கி இருக்கிறார்கள். கொண்டு வரும் பொழுது ஏதோ ஒரு வாசல் { இடிக்க முடியாத நிலையில் இருந்திருக்க வேண்டும் } தடுத்ததனால் நந்தியின் கழுத்தை வெட்டி திரும்ப ஒட்டி இருக்கிறார்கள்.

அதன் சுவடே தெரியவில்லை . எப்படி வெட்டி இருப்பார்கள் என்னால் நம்பவே முடிய வில்லை .

இந்த நந்திதான் நந்தனாருக்கு { திருநாளை போவார் என்ற நாயனாருக்கு } விலகி சிவனை தரிசிக்க ஏதுவாகி நின்றது . எனக்கும் தான் .

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (2-May-16, 10:53 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 183

மேலே