இன்பமெனும் இருப்பின் இருப்பே சிறப்பு...
இன்பமெனும் இருப்பின் இருப்பே சிறப்பு
இருக்கும் வரை, இருப்பதின் இருப்பு தெரிவதில்லை,
இழக்கையில் இருப்பின் மதிப்பு, தாமதமாக தெரிகிறது,
இல்லாத இருப்பாய் இருப்பின், இழந்ததை அறிவதில்லை,
இருப்பென இனம் காணாது இருப்பின், இழப்பாய்த் தெரிவதில்லை,
இருக்கும் வரை இன்பம் தரும், இருப்பாய் இருக்க நினைத்திருப்போம்,
மற்றவரின் வெறுப்பாய் இருப்பதை விட, இன்பம் தரும் இருப்பாய் இருப்பதே சிறப்பு.