இது அன்னை பாடும் தாலாட்டு

இது அன்னை பாடும் தாலாட்டு .
இது அன்பில் வந்த ஓர் ராகம் .
இது செந்நெருப்பில் தோன்றும் உதயம் .
இது கரையில்லாத கானம் . ( இது அன்னை ...)


படை மறந்த பாலகன் உன்னைப்
பாசத்தால் வளர்க்கிறேன் .
மடை திரண்ட வெள்ளம் போலே
மண்ணுலகைப் பார்க்கிறேன் .
உறவாடும் உன்னைக் காண
உலகத்தை வியக்கிறேன் .
திறவாமல் திறக்கும் உந்தன்
வாய்மொழியைக் கேட்கிறேன் . ( இது அன்னை .... )


தருகின்ற மழலை முத்தம்
தவிப்பாகிப் பார்க்கிறேன் .
தருகின்ற உன்றன் கொலுசொலிக்
காணாது திகைக்கிறேன் .
கருக்கொண்ட பொழுதில் கூட கண்ணே
உன்முகம் பார்க்கிறேன் .
கனவினிலும் நினைவினிலும்
கண்மயங்கிக் களிக்கிறேன். ( இது அன்னை .... )


உருகொண்ட உந்தன் உருவம்தான்
உலகத்தை ஆண்டது .
உறவாகி நின்றாய் எந்தன்
உள்ளத்தை நிறைத்தது .
உருவானக் கருவைக் கொண்டுக்
கவிதைநான் வனைவது ?
உனையும் நான் பாடாமல்
எத்தனைநாள் வாழ்வது ? ( இது அன்னை ... )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-May-16, 4:51 pm)
பார்வை : 147

மேலே