நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப்பு...

நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப்பு

அறிவிப்பு,
நாட்களின் சிறப்பு,
ஆட்களின் கணிப்பு,
இது கருத்துத் திணிப்பு,
அதில் பலருக்கு பிணைப்பு,
என்செய்வதென அறியாத் துடிப்பு,
வருவதோ நம் மனதினில் வலிப்பு,
ஆகையினால் ஆகுது நாளோ கருப்பு,
வாழ்கையின் சுவை ஆகிடும் துவர்ப்பு,
அப்படி ஆக்கின் கிடையாது - மன்னிப்பு,
நாள் ஒன்று நமக்கு கிடைத்தது இணைப்பு,
நன்று உழைத்திடத் தானே நமக்கு - உறுப்பு,
அது மட்டும் தானே என்றும் நம் கை இருப்பு,
அதை நன்கு பயனுற செய்வதே நம் உயிர்ப்பு,
அதுவே நம் கையில் கிடைத்த சீட்டுத் துருப்பு,
என்றென்றும் மனதினில் சுவைத்திடுவோம் இனிப்பு,
உவகை கொண்டு உணர்ந்திட்டால் பெறுவோம் களிப்பு,
அறிந்திடுவோம் மனிதனாய்ப் பிறந்த ரகசியத்தின் பிறப்பு,
சொல்லிடும் எனை நினைக்காதீர் இவனென்ன பெரிய பருப்பு,
இதை நினைத்து வரட்டும் அகமதைக் கொண்ட முகம்தனில் சிரிப்பு.

எழுதியவர் : நட்புடன் (20-Jun-11, 3:22 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 292

மேலே