வடநாட்டில் தவ வாழ்க்கை

சாமி என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க.
@@@@

வா மகனே. வா அந்த அறைக்குச் சென்று தனியாக் கொஞ்சம் நேரம் பேசுவோம்.
@@@
(தனி அறையில்)

ஏண்டா ராமநாதா உனக்கு என்னடா பிரச்சனை?
@@@@

சாமி எம் பேரு உங்களுக்கு எப்பிடி தெரியும்?
@@@
ராமநாதா உன்னோட வரலாறே எனக்குத் தெரியும்டா.
@@
என்ன சொல்லறீங்க சாமி. எனக்கு ஒண்ணுமே புரியலீங்க.
@@@@@

புரியாது, புரியாது. சரி உனக்கு அந்த அருமைச்சாமியைத் தெரியுமா?
@@@

தெரியுமாவா? அவன் ஒரு பொம்பள பொறுக்கி. சில பொம்பளங்ககூட திருமணம் செய்யாமலே குடும்ப வாழ்க்கை நடத்திட்டு

அப்பறமா எங்கயோ ஓடிப்பொயிட்டான் சாமி.
@@@

அவன் எங்க போனான்னு தெரியுமா?
@@@@

தெரியாதுங்க சாமி.
@@@
எனக்கு அவனப் பத்தி எல்லாம் தெரியும். நாஞ் சொல்லறேன். கேட்டுக்க. டேய் ராமநாதா அந்த அருமைச்சாமி

ஒழுக்கங்கெட்டவந்தான். அவங்கூட திருமணஞ் செய்யாம குடும்ப வாழ்க்கை நடத்திய அந்த மூணு பொண்ணுங்களும்

ஒழுக்கமானவங்க இல்ல. அவுங்கள்ல ஒருத்திகூட அவனக் கல்யாணம் பண்ணிக்க ஆசப்படலே. அவஞ் சொத்தப் புடுங்கறதலா

தான் அவுங்க குறியா இருந்தாங்க. அவஞ் சொத்தை எல்லாம் புடுங்கிட்டதுக்கப்பறம் அவன ஒண்ணும் இல்லாதவனாக்கித் ரத்தக்

கண்ணீர் எம். ஆர். ராதாவைப் போல தொரத்தி விட்டுடாங்கடா. அவன் வடநாட்டிலே காசிக்குப் போய் மனந்திருந்தி அந்தக் காசி

புண்ணிய தலத்தில தவ வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்காண்டா. அவந்தான் இப்ப ஸ்ரீலஸ்ரீ அருளானந்த சுவாமிகளா நம்ம ஊருக்கு

வந்திருக்கறாண்டா அந்த அருமைச்சாமி. .

@@@@@
அடப் பாவி அருமைச்சாமி. ஒரு கவுரமான பணக்காரக் குடும்பத்திலே பிறந்து ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்திட்டு

எல்லாத்தையும் இழந்துட்டு இப்பிடி சந்நியாசியா வருவன்னு நான் எதிர்ப்பார்க்கலிடா. சரி நா வர்றேன். தாய் தந்தை

உடன்பிற்ப்புகள் உறவினர்கள மதிக்காம நீ ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்ததுக்கு சந்நியாசந்தான் உனக்கு சரியான

தண்டனை. நீ திருந்திட்டயே அது போதுண்டா எனக்கு. இந்த ரகசியத்தை நா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்.

எழுதியவர் : மலர் (6-May-16, 12:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 214

மேலே